/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளிங்கராயன் வாய்க்கால் 2ம் போகத்துக்கு நீர் விடுவதை உறுதிப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல் முடிவு எட்டாமல் முடிந்த கருத்துக்கேட்பு கூட்டம்

ADDED : செப் 25, 2025 02:34 AM
ஈரோடு, தற்போது பவானிசாகர் அணையில் போதுமான அளவு நீர் உள்ளதால், காளிங்கராயன் வாய்க்கால், 2ம் போகத்துக்கும் தொடர்ந்து தண்ணீர் விடுவதை உறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி யில், காளிங்கராயன் அணைக்கட்டு துவங்கி ஈரோடு, கொடுமுடி வழியாக ஆவுடையார்பாறையில் நொய்யல் ஆற்றில் காளிங்கராயன் வாய்க்கால் கலக்கிறது. இதன் மூலம், 15,743 ஏக்கர் பாசனம் பெறுகின்றன. பவானி முதல், ஈரோடு வெண்டிபாளையம் வரை சாய, சலவை, தோல் ஆலை கழிவுகள், ஈரோடு மாநகராட்சி உட்பட உள்ளாட்சி கழிவுநீர் வாய்க்காலில் கலப்பதால், வாய்க்காலில் கான்கிரீட் சுவர், தளம் அமைத்தனர்.
கழிவுநீர் கலப்பதை தடுக்க, 'பேபி வாய்க்கால்' ஈரோடு வரை, 12.2 மைல் வரை அமைத்துள்ளனர். ஆனாலும், காளிங்கராயன் வாய்க்காலில் கழிவுகள் கலப்பதை, நீர்வளத்துறையால் தடுக்க முடியவில்லை.இந்நிலையில், 12.3 முதல், 15.5 வது மைல் வரை, 83.30 கோடி ரூபாயில் புனரமைப்புடன், பேபி வாய்க்காலை அமைக்க நீர்வளத்துறை நிதி பெற்றுள்ளது. இதற்காக செயற்பொறியாளர் திருமூர்த்தி தலைமையில், நேற்று முன்தினம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்காததால், முடிடு எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.
இதுபற்றி, காளிங்கராயன் மதகு பாசன சபை கூட்டமைப்பு செயலர் செல்வகுமார் கூறியதாவது:
காளிங்கராயன் வாய்க்காலை கான்கிரீட்டுடன் பராமரித்து, பேபி வாய்க்காலை முழுமையாக அமைத்தால், 80 சதவீதம் ஆலை கழிவு, உள்ளாட்சி கழிவு தடுக்கப்படும். விவசாயம் பாதிக்காது. 14.8 வது மைலில், நீர்வளத்துறை அலுவலகம் அருகே பேபி வாய்க்காலில் சேகரிக்கப்படும் அனைத்து கழிவுநீரை, தனியாக வெளியேற்றி, கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து காவிரி யில் விட வேண்டும்.
முதல் போகத்துக்கு அக்., 13 வரை தண்ணீர் திறக்கப்படும். தற்போது பவானிசாகர் அணையில் போதுமான அளவு நீர் உள்ளதால், காளிங்கராயன் வாய்க்கால், 2ம் போகத்துக்கும் தொடர்ந்து தண்ணீர் விடுவதை உறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும். பராமரிப்பு திட்டத்துக்காக இடையில் தண்ணீரை நிறுத்தக்கூடாது. கழிவுநீர் கலக்கும் பேபி வாய்க்கால் பராமரிப்பதை, மாநகராட்சி வசம் வழங்கக்கூடாது. இதற்கேற்ப திட்டவரைவை தயார் செய்து காண்பித்த பின், பணியை துவங்கலாம் என கேட்டு கொண்டுள்ளோம்.இவ்வாறு கூறினார்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, நீர்வளத்துறையால் உத்தரவாதம் தர இயலாததால், முடிவு எட்டாமல் கூட்டம் முடிந்தது.