/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
உளுந்து சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : அக் 03, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பாப்பகாப்பட்டி, சிவாயம், வயலுார், கருப்பத்துார், பஞ்சப்பட்டி ஆகிய பஞ்சாயத்தில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள், உளுந்து சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மானாவாரி நிலங்களில் டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு பணி மேற்கொண்டுள்ளனர்.
லேசான மழை பெய்து வருவதால் விதை தெளிப்பு செய்யப்பட்ட உளுந்து செடிகள் முளைத்து வருகின்றன. மேலும் பருவ மழை இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் மானாவாரியாக இந்த உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர்.