ADDED : ஜூன் 08, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:பவானிசாகர்
அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி மறுத்த வனத்துறையினரை
கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில்,
சத்தி டி.எப்.ஓ., அலுவலகம் முன் இரண்டு நாட்களாக உண்ணாவிரத
போராட்டம் நடந்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் வனத்துறை, வருவாய்
துறை, பொதுப்பணி துறை இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு
ஏற்பட்டது. அனுமதி வாங்கிய அனைத்து வாகனங்களும் அனுமதிக்கப்படும்
என்று அதிகாரிகள் உறுதி கூறியதால், விவசாயிகள் போராட்டத்தை வாபஸ்
பெற்றனர்.
