/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர் திருட்டை தடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
நீர் திருட்டை தடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2025 01:54 AM
பெருந்துறை, பெருந்துறை ஒன்றியம், நல்லாம்பட்டி அருகே கீழ்பவானி கால்வாயின் அவசர கால மதகுகளை திறந்து விட்டு, தண்ணீரை திருடிச் செல்லும் நபர்கள் மீதும், இதற்கு துணையாக இருக்கக் கூடிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க தலைவர் ரவி தலைமை வகித்தார். பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், முன் கூட்டியே பாசனத்திற்கும் சிறப்பு நனைப்பிற்காகவும், கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லாம்பட்டி அருகே, 45வது மைல் பகுதியில் அவசர கால நீர் போக்கியை திறந்து, சிலர் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு, அங்குள்ள குளங்களை நிரப்புகின்றனர்.
இதற்கு அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் துணை போவதாக கூறி, நல்லாம்பட்டி அவசர கால மதகு முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

