/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அபார்ட்மென்ட் வீட்டில் வெடித்த பிரிட்ஜால் பகீர்
/
அபார்ட்மென்ட் வீட்டில் வெடித்த பிரிட்ஜால் பகீர்
ADDED : மே 25, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, ரங்கம்பாளையம், வள்ளிமுருகன் நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசிப்பவர் கிருஷ்ணவேணி, 65; சொந்த வேலையாக வெளியூர் சென்றிருந்தார். நேற்று மதியம், 3:00 மணியளவில் வீட்டில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.
பிறகு கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தனர் ஈரோடு தீயணைப்பு நிலையம், தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வீட்டை திறந்து பார்த்த போது, பிரிட்ஜ் எரிந்து கொண்டிருந்தது. 15 நிமிடங்களில் தீயை அணைத்தனர். சீரற்ற மின் வினியோகத்தால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

