/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகன் மீது சுடுகஞ்சியை ஊற்றிய தந்தை கைது
/
மகன் மீது சுடுகஞ்சியை ஊற்றிய தந்தை கைது
ADDED : நவ 14, 2025 01:15 AM
டி.என். பாளையம். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே காட்டு வீதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரின் மகன் உதயகுமார், 16; பத்தாம் வகுப்பு மாணவன், தந்தையுடன் வசிக்கிறார். உதயகுமார் பள்ளி செல்ல நேற்று காலை தயாராகி கொண்டிருந்தார். அப்போது செருப்பு அறுந்து போனதால் சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தந்தை பரமேஸ்வரன் தான் குளிப்பதற்காக, தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து குளியலறையில் ஊற்றும்படி கூறியுள்ளார்.
செருப்பை தைத்த பின் தண்ணீர் பிடித்து ஊற்றுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரன், மகனை தகாத வார்த்தைகளால் திட்டி, அடுப்பில் கொதித்து கொண்டிருந்த கஞ்சியை எடுத்து வந்து மகன் முதுகில் ஊற்றியுள்ளார். வலி தாளாமல்அலறியவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உதயகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த பங்களாபுதுார் போலீசார், பரமேஸ்வரனை கைது செய்தனர்.

