ADDED : ஏப் 20, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு
அருகே ராயபாளையம் புதுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 70; உடல்நிலை
சரியில்லாத நிலையில், பழனிசாமியை அவரது மகன் ஒரு வாரத்துக்கு முன்
மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ராயபாளையம் புதுாருக்கு அழைத்து
வந்தார்.
நேற்று முன்தினம் மாலை மகன் வேலையை முடித்து வீட்டுக்கு
சென்றபோது பழனிசாமியை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால்,
சித்தோடு போலீசில் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார்
தேடி வருகின்றனர்.
