டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம்; வணிகர் எதிர்ப்பு
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம்; வணிகர் எதிர்ப்பு
ADDED : செப் 27, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழ்நாடு
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இளைஞரணி சார்பில் மாவட்ட, மாநகர்
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ்
தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
மத்திய அரசின், 0.4 சதவீத
எம்.டீ.ஆர்., கட்டண விதிப்பு எனப்படும் வாடிக்கையாளர்கள் டெபிட்
கார்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும்போது,
வணிகர்கள் வங்கிகளுக்கு சேவை கட்டணமாக செலுத்துவது வணிகர்களை
பாதிக்கும். இதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.
சிறுகுறு
வணிகர்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்பது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்
நிர்வாகிகள் ரியாஷ் அகமது, தங்கராஜ், தீபக், தமிழரசன் உட்பட பலர்
பங்கேற்றனர்.
