ADDED : ஆக 21, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
46 புதுார் நொச்சிகாட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்.
சித்தோடு அரசு போக்குவரத்து கழக டிப்போ மெக்கானிக். இவரின் மகள்
பிரதீபா, 22; பி.டெக்., பட்டதாரி. திருமணம் ஆகாதவர். கடந்த, 18ம் தேதி
இரவு வழக்கம்போல் பிரதீபா தனது அறைக்கு துாங்க சென்றார்.
மறுநாள்
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த பெற்றோர்
கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
மின்விசிறியில் துாக்கிட்ட நிலையில் பிரதீபா தொங்கி
கொண்டிருந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட
நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. தந்தை விஸ்வநாதன்
புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
