/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 19.77 லட்சம் வாக்காளர்கள்
/
இறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 19.77 லட்சம் வாக்காளர்கள்
இறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 19.77 லட்சம் வாக்காளர்கள்
இறுதி பட்டியல் வெளியீடு மாவட்டத்தில் 19.77 லட்சம் வாக்காளர்கள்
ADDED : ஜன 07, 2025 01:18 AM
ஈரோடு, ஈரோட்டில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டு, நிருபர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிக்கும் கடந்த, அக்., 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, 19 லட்சத்து, 64,676 வாக்காளர்கள் இருந்தனர். அதன்பின், இணைய தளம் மூலமும், 2 சிறப்பு முகாம் நடத்தியும் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம், 74,677 படிவங்கள் பெறப்பட்டு, 70,818 படிவங்கள் ஏற்கப்பட்டது. இதில், 35,855 பெயர் சேர்ப்பும், 23,112 பெயர் நீக்கப்பட்டது. 11,851 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது கூடுதலாக, 12,746 வாக்காளர்கள் அதிகரித்து, 19 லட்சத்து, 77,419 பேர் உள்ளனர். இதில் ராணுவம் உள்ளிட்ட சேவை பணிகளில் உள்ளவர்கள், 267 பேர் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில், 64.24 சதவீதம் பேர் தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் எண்ணுடன் இணைத்துள்ளனர். இவ்வாறு கூறினார். டி.ஆர்.ஓ., சாந்தகுமார், ஆர்.டி.ஓ., ரவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

