தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'ஓவர் சவுண்ட்' பைக்குகளுக்கு அபராதம்

'ஓவர் சவுண்ட்' பைக்குகளுக்கு அபராதம்

'ஓவர் சவுண்ட்' பைக்குகளுக்கு அபராதம்


ADDED : ஏப் 13, 2025 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 04:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானியில் மாலை நேரங்களில், விலை உயர்ந்த பைக்குகளில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சத்தம் எழுப்பியபடி இளைஞர்கள் செல்வது, சமீபமாக அதிகரித்து விட்டது. இதுகு-றித்து பல்வேறு தரப்பில் புகார் சென்றது.

இந்நிலையில் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவண-குமார் தலைமையில், சித்தோடு, பவானி, லட்சுமி நகர் உள்-ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில், போலீசார் வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். இதில் ராயல் என்பீல்டு, கேடிஎம் டியூக், யமஹா எம்.டி.-15, பல்சர் பைக் என, 15 இருசக்கர வாகன ஓட்-டிகளை பிடித்தனர். மெக்கானிக்கை வரவழைத்து வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சைலன்ஸர்களை அகற்றினர். ஒவ்வொரு பைக்கிற்கும் தலா, 2,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இனி இதுபோல் நடந்தால், பைக்குகள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us