/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கசிவால் தீ விபத்து தீயை அணைத்த மக்கள்
/
மின் கசிவால் தீ விபத்து தீயை அணைத்த மக்கள்
ADDED : ஆக 08, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோட்டில் உள்ள வீட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. பொதுமக்களே தீயை அணைத்தனர்.
ஈரோடு, சங்கு நகர் ஆறாவது வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது வீட்டில் இருந்து நேற்று காலை, 11:00 மணியளவில் கரும்புகை வந்தது. அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
ஜெகநாதனுக்கும் தகவல் கிடைத்து அங்கு வந்தார். தீயணைப்பு துறையினர் செல்லும் முன், பொதுமக்கள் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக மின்சார ஒயரில் இருந்து தீ, மர அலமாரிக்கு பரவியது. பொதுமக்களின் துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.