ADDED : ஜன 13, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நகராட்சியில், 18 வார்டுகளில் தினந்-தோறும் சேகரமாகும், 5 டன் அளவு மக்கும், மக்காத குப்பை வாரச்சந்தை வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான நுண்ணுயிர் உரமாக்கல் மையம் அருகே கொட்டப்படுகிறது.
இப்பகுதியை ஒட்டி குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்கள் உள்ளன. குப்பையில் இருந்து நேற்று காலை கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அப்ப-குதி புகை மண்டலமாக மாறியது. தீ பரவியதால் ஒரு கிலோ மீட்-டருக்கும் மேல் புகை பரவி வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்கு ஆளாகினர். மக்களின் தகவலின்படி சென்ற நகராட்சி ஊழியர்கள் தீயை அணைத்தனர். தீ அணைந்தாலும் மாலை வரை அப்ப-குதி புகைமூட்டமாகவே இருந்தது