ADDED : செப் 07, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் டவுன் பஞ்சாயத்தில் சேகரிக்கப்படும் குப்பை, ஆட்கொண்டேஸ்வரர் கோவில் அருகே வசிஷ்ட நதி கரையோரம் திறந்தவெளியில் குவித்துள்ளனர். அங்கு நேற்று இரவு, 7:30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள், தீயை அணைக்க முயன்றும் முடிய
வில்லை. தீ மளமளவென பரவியது. மக்கள் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், 8:00 மணிக்கு அங்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே புகைமூட்டத்தால், மக்கள் அவதிக்கு ஆளாகினர். தீ விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.