/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நுால் மில்லில் தீ விபத்து; பல லட்சத்துக்கு சேதம்
/
நுால் மில்லில் தீ விபத்து; பல லட்சத்துக்கு சேதம்
ADDED : செப் 13, 2025 01:26 AM
சென்னிமலை, சென்னிமலை டவுன் அம்மாபாளையத்தில் வசிப்பவர் சண்முகசுந்தரம், 43; முருங்கத்தொழுவு ஊராட்சி தண்ணீர் பந்தலில், பனியன் வேஸ்ட் துணியை அரத்து பஞ்சாக மாற்றி நுால் தயாரிக்கும் ஓபன் என்ட் மில் வைத்துள்ளார். மில்லில் நேற்று மதியம் பஞ்சு குடோனில் தீப்பிடித்து மளமளவென்று பரவியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். பஞ்சு என்பதால் அருகிலிருந்த நுால் பேல்களிலும் பற்றி எரிந்தது.
இதனால் பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்களும் வரவழைக்கப்ட்டனர். நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சு மற்றும் நுால் பேல், இயந்திரம் எரிந்து சேதமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து, சென்னிமலை போலீசார்
விசாரிக்கின்றனர்.