ADDED : மார் 24, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
பவானி, பவானி அருகே மைலம்பாடி, செங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் குமார், 47; அதே பகுதியில் பஞ்சு மில் வைத்துள்ளார். மில்லில் நேற்று மாலை தீப்பிடித்து.
இதைப்பார்த்த தொழிலாளர்கள், பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளது. தீயில் சில ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
