ADDED : அக் 05, 2026 04:56 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
பஸ் ஸ்டாண்ட் முத்துசாமி வீதியில், அடுக்குமாடி குடியிருப்பு
உள்ளன. இங்கு தரைதளத்தில் இரு கடைகளும், முதல், இரண்டா-வது மாடியில்
எட்டு வீடுகளும் உள்ளன. இதற்கான, 10 மின் அளவீடு கருவிகள் தரைதளத்தில் உள்ளன.
இதில்
நேற்று காலை புகை வெளிவந்தது. இதைப்பார்த்து குடியிருப்புவாசிகள்
அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் செல்வதற்குள் மின் இணைப்பு
துண்டிக்கப்பட்டதால் தீ அணைந்தது. மின்கசிவால் தீ விபத்து
ஏற்பட்டுள்ளது.
