ADDED : ஜூன் 26, 2026 01:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு எம்.எஸ்.சாலையில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, ஸ்டைல் பாயிண்ட் பேமிலி சலுான் என்ற குளிரூட்டப்பட்ட சிகை அலங்கார கடை உள்ளது. முதல் மாடியில் அமைந்துள்ள கடைக்கு, இரண்டாவது மாடியில் ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று மதியம், 3:00 மணியளவில் ஜெனரேட்டர் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. இதனால் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்தனர். கடை ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். முடியாத நிலையில் ஈரோடு தீய-ணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. தீய-ணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிக வெப்பம் காரணமாக ஜெனரேட்டரில் தீப்பிடித்தது தெரிய வந்தது.
