ADDED : நவ 19, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி குப்பை கிடங்கு வெண்டிபாளையத்தில்
உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு கீடங்கு தீப்பிடித்து
எரிய துவங்கியது. அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை நீண்ட நேரம்
கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
பின்னர் ஈரோடு
தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று, நேற்று அதிகாலை 1:30 மணி வரை தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பையில் பற்றிய தீயால், அப்பகுதி
புகை மண்டலமாக காணப்பட்டது. 1 ஏக்கர் பரப்பிலான குப்பை முழுமையாக
எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
