ADDED : ஏப் 25, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு, மணல்மேடு பகுதியில் பிரவீன்குமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று கடையில் பஜ்ஜி போட்டு கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கடையில் தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனர். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கலைசெல்வன் தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
