நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி பவானி அருகே ஜம்பை, நல்லிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 54; அதே பகுதியில் தகர சீட்டால் மேயப்பட்ட புண்ணாக்கு குடோன் வைத்துள்ளார்.
நேற்று காலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், 5,௦௦௦ ரூபாய் மதிப்பிலான புண்ணாக்கு எரிந்து சாம்பலானது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.