ADDED : ஆக 28, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி, எஸ்.ஆர்.டி., நகர் எதிரே ஹோட்டல் உள்ளது. நேற்று முன்தினம் இரவு உரிமையாளர் வழக்கம்போல், ஹோட்டலை பூட்டி விட்டு சென்றார். நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ஹோட்டலுக்கு முன்புறம் இருந்த, சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்சார பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு அவ்வழியே சென்றவர்கள் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் மின்சார பெட்டி, ஒயர்களில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதையடுத்து, மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. அருகே இருந்த கடைக்காரர்கள் இணைந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பொருட்கள் சேதமடையவில்லை. புன்செய்புளியம்பட்டி போலீசார் விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.