நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு, மூலப்பட்டறை பார்க் சாலையில் உள்ளது வேல் கபே. நேற்று காலை, 9:15 மணியளவில் காஸ் கசிவால் திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கு காலை உணவருந்த வந்த பொதுமக்கள், தீ விபத்தை பார்த்து அலறியடித்து ஓடினர்.
ஈரோடு தீயணைப்பு வீரர்கள், 10 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். அடுப்பை சிலிண்டருடன் இணைக்கும் டியூப்பில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.