ADDED : மார் 15, 2026 07:21 AM

ஈரோடு:ஈரோட்டில் பழைய துணி குடோனில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
பி.பெ.அக்ரஹாரத்தை அடுத்த சுண்ணாம்பு ஓடை பகு-தியில், பவானி பிரதான
சாலையில், அலிசா ஓல்ட் கார்மெண்ட்ஸ் என்ற பழைய துணி குடோன் உள்ளது. இதன்
உரிமையாளர் ஆரிப், 61; குடோன் அருகில் வி.ஜி.பி., நகரில் வசிக்கிறார்.
நேற்று
மதியம், 12:45 மணியளவில் குடோனில் இருந்து கரும்-புகை வந்தது.
அப்பகுதியினர் தகவல் தந்ததும், ஆரிப் வந்து குடோனை திறந்தார்.
பின்னர் ஈரோடு தீயணைப்பு நிலையத்-துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரு வாகனங்களில் தீய-ணைப்பு நிலைய வீரர்கள் விரைந்தனர். அதற்குள் தீ
கொழுந்து விட்டு, பல அடி உயரத்துக்கு புகையும், ஜூவாலையும்
கிளம்பி-யது.
தீ ஜூவாலையால் குடோன் பின்னால் இருந்த வீடுகளின்
சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் உருகி-யது.
குடோனை சுற்றி வீடுகள் ஏராளமாக உள்ளன. தீ விபத்தால் ஏற்பட்ட
புகையால், மக்கள் மூச்சு விட சிரமம் ஏற்பட்டது. சிலருக்கு கண்
எரிச்சல் போன்ற உபாதை ஏற்பட்டது.
பவானி பிரதான சாலை என்பதால், விபத்தை
காண மக்கள், வாகன ஓட்-டிகள் கூட்டம் கூடி, போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது. பழைய துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மதியம்,
1:45 மணிக்கு தீயை முழுமையாக கட்டுப்படுத்தினாலும், 4:00 மணி வரை
தொடர்ந்து குடோனில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தீ
விபத்துக்கான காரணம் குறித்து, கருங்கல்பாளையம் போலீசார்
விசாரிக்கின்றனர்.

