ADDED : ஏப் 26, 2026 05:46 AM
பெருந்துறை:பெருந்துறையில் குன்னத்துார் ரோடு செல்லம் நகரை சேர்ந்தவர் சேட்டு, 39; சேலம் - -கோவை தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை-பெத்தாம்பாளையம் பிரிவு அருகில், ஆறு வருடங்களாக பழைய இரும்புக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடையில் பத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று விடுமுறை என்பதால், யாரும் கடையில் இல்லை. மாலை, 6:30 மணியளவில் திடீரென்று கடையில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. அக்கம்பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடையில் பஞ்சு பேல் அதிகமாக இருந்தால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
