/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
/
தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
ADDED : ஜன 03, 2026 07:40 AM
ஈரோடு: ஈரோடு, மணிக்கூண்டு அருகே, சுல்தான்பேட்டை வீதியில், ஜிப்ரி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் விற்பனை கடை செயல்-பட்டு வருகிறது. இக்கடையின் பொருட்களை இருப்பு வைப்ப-தற்கான குடோன், எதிரில் உள்ள கட்டடத்தின் கீழ்தளத்தில் உள்-ளது. நேற்று காலை, குடோனில் இருந்து கரும்புகை வெளியேறி தீபிடித்தது.
தீயணைப்பு துறை வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் விஜய-குமார் கூறியதாவது: குடோனில் இருந்த பழைய அட்டை பெட்டிகள் தீ பிடித்து எரிந்-துள்ளன. மற்ற பொருட்கள் மீது பரவுவதற்கு முன் தீயை அணைத்துவிட்டோம். குடோனில் மின்சார இணைப்புகள் எதுவும் இல்லாததால், குடோனுக்கு அருகில் உள்ள கழிவ-றைக்கு வந்தவர்கள், புகைப்பிடித்து வீசியிருக்கலாம் என்ற சந்-தேகம் உள்ளது. இதுகுறித்து விசாணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.

