ADDED : அக் 21, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பவானி சீனிவாசபுரத்தில் தகர ஷீட்டால் ஆன பழைய இரும்பு கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் இக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் அனைத்தும் தீக்கிரையாகின.
பவானி தீயணைப்பு நிலைய வாகனம் மட்டுமின்றி, அந்தியூர் தீயணைப்பு நிலைய வாகனமும் வரவழைக்கப்பட்டது. நான்கு மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். கடைக்குள் விழுந்த வானவெடியால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.