ADDED : அக் 10, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து, ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில், பள்ளி மாணவர்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி ஈரோடு எம்.எஸ்., சாலை கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.