/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டாசால் விபத்தில்லை தீயணைப்பு துறை நிம்மதி
/
பட்டாசால் விபத்தில்லை தீயணைப்பு துறை நிம்மதி
ADDED : அக் 22, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு மற்றும் வெடியால் எந்த விபத்தும் ஏற்படவில்லை. பவானியில் மட்டும் வாணவெடியால், ௧௯ம் தேதி இரவு பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைத்தவிர வேறு அசம்பாவிதம் நிகழவில்லை. அதுபோல் பட்டாசு வெடித்ததில் கை, கால், உடலில் தீக்காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மக்கள், குழந்தைகள், சிறுவர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
இதேபோல் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக, மாவட்டத்தில் வழக்குகள் பதிவாகவில்லை. தீபாவளி பண்டிகை அமைதியாக முடிந்ததால், தீயணைப்பு நிலைய வீரர்கள் நிம்மதி அடைந்தனர்.