ADDED : ஏப் 24, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:ஆத்துாரை சேர்ந்தவர் தாமோதரன், 50. இவர், துலுக்கனுார், ஒட்டம்பாறையில் உள்ள தனியார் அரிசி ஆலை குடோனின் ஒரு பகுதியில், ஜவ்வரிசி பிடிப்பதற்கான, 20,000 சாக்குகளை அடுக்கி வைத்திருந்தார். நேற்று மாலை, 6:20 மணிக்கு குடோனில் இருந்து புகை வந்தது.
ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள், 6:30 மணிக்கு அங்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி, மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
ஆனால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், அனைத்து சாக்கு மூட்டைகளும் எரிந்துவிட்டன. மின் கசிவா, மர்ம நபர்கள் தீ வைத்தனரா என, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

