ADDED : அக் 14, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், திருவாரூரில் இருந்து வைக்கோல் ஏற்றிய லாரி, தாராபுரத்தை அடுத்த குண்டடத்துக்கு நேற்று வந்தது. அங்கு சில கட்டுகளை இறங்கிவிட்டு, ௧:௦௦ மணியளவில், அத்திமரத்துப்பாளையத்தை நோக்கி, டிரைவர் ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் வைக்கோல் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது. தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் லாரி சேதமின்றி தப்பியது. லாரியில் இருந்த, ௧௦ ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் மட்டும் எரிந்து விட்டது.