ADDED : ஜூன் 01, 2026 03:55 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே கொன்னமடையை சேர்ந்தவர் மல்லிகா, 50, கூலி தொழிலாளி;
தென்னங்கீற்று வேயப்பட்ட கூரையில் வசித்தார். நேற்று காலை, 10:00
மணிக்கு, அவர் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டுக்குள் இருந்து
கரும்புகை வெளியேறி, சிறிது நேரத்தில் எரிய தொடங்கியது.
கோபி
தீயணைப்பு நிலைய வீரர்கள் செல்வதற்குள், வீட்டுக்குள் இருந்த,
தட்டுமுட்டு சாமான்கள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்துநாசமாகி விட்டது.
