ADDED : நவ 22, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீ விபத்து தடுப்பு
விழிப்புணர்வு
காங்கேயம், நவ. 22-
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கம்பளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நலக்கல்வி வழங்கப்பட்டது. வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, மருத்துவர் செந்தில்குமார், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கதிரவன், நிர்மல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.