ADDED : மார் 13, 2026 04:29 AM

தாளவாடி: தாளவாடி மலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்-ளது. கோவிலில் ஆண்டு தோறும் மார்ச் மாதத்தில் குண்டம் விழா நடக்கிறது. நடப்பாண்டு விழா கடந்த, 10ம் தேதி துவங்கி-யது. நேற்று சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
இதை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்துடன், மேளதாள வாத்தியங்களுடன் திருவீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டது. பிறகு கர்நாடக இசை, பீரேஸ்வரா நடனம், பார்வதி குறவர் நடனம் மற்றும் மேள-தாளங்களுடன், புஷ்ப வல்லக்கு ஊர்வ-லத்தில் சுவாமி எடுத்து வரப்பட்டது.கோவிலுக்கு எதிரேயுள்ள பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில், பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கினார். அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இந்த மாரி-யம்மன் கோவிலானது இஸ்லாமியர் வழிபடும் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ளது.
பல நுாறு ஆண்டுகளாக, மத நல்லிணக்கத்தோடு குண்டம் விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பூசாரி மட்டுமே தீ மிதிப்பார். குண்டம் விழாவில் தமிழகம், கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.
