ADDED : செப் 19, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:வட கிழக்கு பருவமழையை
முன்னிட்டு, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி,
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் நடந்தது.
ஈரோடு தாசில்தார் கவிதா, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தனர். தீயணைப்பு துறையிடம் உள்ள கருவி
கள்,
இயந்திரங்களை பேரிடர் காலத்தில் பயன்படுத்துவது, தண்ணீரில்
விழுந்தவர்களை காப்பாற்றும் முறை, வெள்ளத்தில் சிக்கியவர்களை
மீட்பது உள்ளிட்டவை குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் செயல்முறை
விளக்கம் அளித்தனர்.
காவிரி கரையோரம் வாழும் மக்கள் பார்த்தனர்.
கரையோர மக்களுக்கு பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய
முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
இந்நிகழ்ச்சி நடந்தது.
