/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் த.வெ.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
/
ஈரோட்டில் த.வெ.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ADDED : செப் 09, 2024 06:37 AM
ஈரோடு: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் மற்றும் மாநாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, அக்கட்சியினர் மக்களுக்கு இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
தமிழகத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலை நோக்கிய பயணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மேற்கொண்டு வருகிறார். கட்சி கொடியை கடந்த மாதம், 22ம் தேதி, சென்னை பனையூரில் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து கட்சியின் பாடலை வெளியிட்டார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் கட்சிக்கான ஆங்கீகாரத்தை, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. மேலும், மாநாட்டிற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. இதை வரவேற்கும் வகையில், ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் மாநகர செயலர் ஹக்கீம் தலைமையில், கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

