/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்க்கை
/
மாநகராட்சி பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்க்கை
ADDED : மார் 05, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு, ஈ.பி.பி. நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், முதலாம் வகுப்பு சேர்க்கையை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார். இதன்படி பள்ளியில் சேர்ந்த, 10 மாணவ, மாணவிகளுக்கு மலர் கொத்து, எழுத்து பலகை, இனிப்பு வழங்கினார்.
இதேபோல் ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளியில், 12 பேர்
சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு சிலேட்டு, நோட்டு புத்தகம், பென்சில், பென்சில் பாக்ஸ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, மாவட்ட கல்வி அலுவலர் சுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

