கொங்கு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
கொங்கு பாலிடெக்னிக்கில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 23, 2026 01:22 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை; பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லுா-ரியில், முதலாமாண்டு டிப்ளமோ வகுப்பு துவக்க விழா நடந்தது. கொங்கு வேளாளர் கல்வி அறக்-கட்டளை பாரம்பரிய பாதுகாவலர் வெங்கடேஸ்-வரன் தலைமை வகித்தார். கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். முதல்வர் சந்திரசேகரன் வரவேற்றார்.
தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்கத்தின் வாரியத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு வழங்-கப்பட்டது.கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன், கொங்கு கலை கல்லுாரி தாளாளர் சச்சிதானந்தம், கொங்கு வேளாளர் கல்வி அறக்-கட்டளை துணை தலைவர் இளங்கோ, துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி அடிப்படை அறிவியல் துறை மூத்த விரிவுரையாளர் சாந்தி நன்றி கூறினார்.
