ADDED : பிப் 10, 2024 10:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டல, வார்டு கவுன்சிலர்கள் கூட்டம், நேற்று நடந்தது. அலுவலகத்தில் நேற்று மண்டல குழு கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் பழனிசாமி தலைமையில், உதவி ஆணையாளர் அண்ணாத்துரை முன்னிலை வகித்தார்.
வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை பழுதுகளை சரி செய்ய தனி வாகனம் வேண்டும். பழுதடைந்த போர்வெல்களை சரி செய்ய வேண்டும். வார்டுக்கு தலா, 20 லட்சம் ரூபாய் நிதி அடிப்படையில், 15 வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட, மூன்று கோடியை செலவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.