ADDED : டிச 02, 2024 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, இரண்டு டன் மீன் மட்டுமே நேற்று வரத்தானது. இதனால் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 50 ரூபாய் முதல் 100 வரை விலை உயர்ந்தது. வஞ்சிரம் கிலோ, 1,000 ரூபாய் முதல் 1,100 வரை விற்பனையா-னது.
இதேபோல் ஊளி கிலோ-550 ரூபாய், கடல் அவரி-750, கடல் பாறை-550, கனவா--450, சங்கரா-450 மயில் மீன்-900, தேங்காய் பாறை--550, கொடுவா-850, சாலமோன்-1,000, வெள்ளை வாவல்-1,000, கருப்பு வாவல்--750, முரள்-450, விளா மீன்--550, டுயானா-800, திருக்கை--400 இறால்-500 முதல் 800, அயிலை--250, மத்தி-250, நீல நண்டு-650 விலைகளிலும், டேம் மீன்களான கட்லா-200, பாறை--200, லோகு--200, கொடுவாய்--250, ஜிலேபி- மீன்-140 ரூபாய்க்கும் விற்றது.