ADDED : ஏப் 20, 2026 04:47 AM
ஈரோடு:ஈரோடு
ஸ்டோனி பாலம், காவிரி சாலை மீன் மார்க்கெட்டுக்கு தமிழகம்
மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு
வரப்படுகிறது. தமிழகத்தில் மீன் பிடி தடைக்காலம் துவங்கிய நிலையில்
மார்க்கெட்டுக்கு நேற்று, 5 டன் மீன் வரத்தானது.
கேரளா,
கர்நாடகாவில் இருந்து மட்டுமே வந்தது. வரத்து குறைந்ததால்
கிலோவுக்கு, 100 ரூபாய் வரை விலை உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.1,000க்கு
விற்ற வஞ்சிரம், 1,100 ரூபாய்; 1,100க்கு விற்ற வெள்ளை வாவல், 1,200
ரூபாய், 1,000க்கு விற்ற கருப்பு வாவல் 1,100 ரூபாய்க்கு விற்றது.பிற
மீன்களின் விலை விபரம் (ரூபாயில்): அயிலை-300, மத்தி-300, சங்கரா-400,
கிழங்கா-200, ஊளி மீன்-600, விளாமீன்-600, கடல் கொடுவா-600, இறால்-600,
நண்டு-700, லோகு-200, கட்லா-200, பாறை-180, ஜிலேபி-150, நெய்மீன்-150, கடல்
அவுரி-700, முரல்-600, கடல் பாறை-600, கனவா-450, கிளி மீன்-600, மயில்
மீன்-800, திருக்கை-500.
