ADDED : நவ 18, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சேவல் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி, சென்னிமலை போலீசார், பனியம்பள்ளி ஊராட்சி, செட்டித்தோட்ட பகுதியில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆறு பேர் சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்தனர். இதில் ஐந்து பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி விட்டார். கும்பலிடம், 6,000 ரூபாய், இரண்டு சேவல் மற்றும் மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
போலீசில் சிக்கியவர்கள் செட்டித்தோட்டம் புதுார் திருஞானமூர்த்தி, 50; புதுப்பாளையம் ரமேஷ், 33; சென்னிமலை பூபதி, 34, மணிகண்டன்,27; சென்னிமலை மணிக்காரடு பழனியப்பன் என தெரிந்தது. தப்பி ஓடிய சென்னிமலை பெரியார் நகர் ஸ்ரீ ஹரியை தேடி வருகின்றனர்.

