தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரேஷன் அரிசி கடத்திய ஐந்து பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய ஐந்து பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய ஐந்து பேர் கைது


ADDED : நவ 17, 2024 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2024 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, நவ. 17-

சிவகிரி பாப்பம்பாளையம் பகுதியில், மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த மாருதி ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவது

கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக இருவரிடம் விசாரித்ததில், கருக்கம்பாளையம் போரக்காட்டுபுதுாரை சேர்ந்த ரவி, 34, சுரேஷ், 40, என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். 500 கிலோ ரேஷன் அரிசி, மாருதி ஆம்னி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

* தாளவாடி போலீசார், நேற்று மாலை மகாராஜன்புரம் சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, டி.வி.எஸ்.எக்சல் மொபட்டில் தனித்தனியாக மூன்று பேர் மூட்டைகளுடன் வந்தனர். அவர்களை சோதனை செய்த போது ஆறு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது. இவர்கள் தாளவாடியை சேர்ந்த கலீம் ஷெரிப், 62, ஆரிப்கான், 52, சாம்ராஜ் நகரை சேர்ந்த முஜீப் அகமது, 44, எனவும், மொத்தம், 390 கிலோ ரேஷன் அரிசி வைத்திருந்ததும் தெரிந்தது. மூவரையும் கைது செய்து மூன்று டூவீலர்கள், 390 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us