/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெறி நாய்கள் கடித்து ஐந்து ஆடுகள் பலி
/
வெறி நாய்கள் கடித்து ஐந்து ஆடுகள் பலி
ADDED : நவ 26, 2025 01:32 AM
காங்கேயம், காங்கேயம் யூனியன் பாப்பினி பஞ்., வரதப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயா, 60; விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், 30 செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்து சென்றார். நள்ளிரவில் பட்டிக்குள் தெருநாய்கள் புகுந்து கடித்ததில், மூன்று செம்மறி ஆடு, இரண்டு குட்டி பலியானது. எட்டு ஆடுகள் படுகாயம் அடைந்தன.
நேற்று காலை பட்டிக்கு சென்றவர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வருவாய் துறையினர், காங்கேயம் போலீசார், கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காங்கேயம் பகுதியில் தெருநாய்களுக்கு, ஆடுகள் பலியாவது தொடர்வதால், கால்நடை வளர்ப்போர் வேதனையில் உள்ளனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்; பலியான ஆடுகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

