தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கவுந்தப்பாடியில் கொடி அணிவகுப்பு

கவுந்தப்பாடியில் கொடி அணிவகுப்பு

கவுந்தப்பாடியில் கொடி அணிவகுப்பு


ADDED : மார் 13, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 04:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.எஸ்.ஐ.எப்.,) மற்றும் உள்ளூர் போலீசாரின், கொடி அணிவகுப்பு ஊர்வலம், பவானி சட்டசபை தொகுதிக்கு உட்-பட்ட கவுந்தப்பாடியில் நேற்று நடந்தது.

கவுந்தப்பாடி நால்ரோடு அருகே ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோவில் அருகே துவங்கிய ஊர்வலத்துக்கு கவுந்தப்பாடி இன்ஸ்-பெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கவுந்தப்பாடி நால்-ரோடு, மூன்று ரோடு, மருத்துவமனை வீதி, கவுந்தப்பாடி புதுார் என இரண்டரை கி.மீ., துாரம் சென்றனர். நிகழ்வில் கோபி டி.எஸ்.பி., சீனிவாசன், கோபி இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜன் உட்பட, 73 பேர் பங்கேற்றனர். கொடி அணிவகுப்பு ஊர்வ-லத்தில் பங்கேற்ற போலீசார், மத்திய படை வீரர்களை, இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையிலான குழுவினர், மலர் துாவி வரவேற்றனர்.* சத்தி போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீசார், டி.எஸ்.பி., முத்தரசு தலைமையில், சத்தியமங்க-லத்தில் நேற்று கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். மணிக்-கூண்டில் தொடங்கி எஸ்.ஆர்.டி., கார்னரில் முடிந்த பேரணியில், 120 பேர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us