/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பு.புளியம்பட்டியில் கொடி அணிவகுப்பு
/
பு.புளியம்பட்டியில் கொடி அணிவகுப்பு
ADDED : ஆக 25, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்-டியில் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. சத்தி டி.எஸ்.பி., முத்தரசன் துவக்கி வைத்தார்.
இன்ஸ்பெக்டர்கள் கீதா, அன்னம் மற்றும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் என, 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பஸ் ஸ்டாண்ட் முன் தொடங்கி, விநாயகர் சிலை ஊர்வல பாதையான கோவை--சத்தி சாலை, பவானிசாகர் சாலை என முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் நிறைவடைந்-தது. இதில் துப்பாக்கியுடன் போலீசார் பங்கேற்றனர்.

