ADDED : மார் 24, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள கருமாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா பூச்சாட்டு இன்றிரவு நடக்கிறது.
இதை தொடர்ந்து, 28ம் தேதி கம்பம் நடுதல், 30ம் தேதி காலை தீர்த்தம் ஊர்வலம் மற்றும் மாலையில் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. ஏப்.,1ம் தேதி பொங்கல் வைபவம், 3ம் தேதி அம்மன் தேர் ஊர்வலம், 4ம் தேதி கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டம் நடக்கிறது. 5ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.
