ADDED : ஏப் 11, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகு-திகளில், தேர்தல் பறக்கும் படையால் நேற்று முன்தினம் வரை, 1.69 கோடி ரூபாயை பறிமுதல் செய்திருந்தனர்.
நேற்று ஈரோடு மேற்கில், 5.69 லட்சம் ரூபாய், பெருந்துறையில், 70,500 ரூபாய் என, 6.40 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அத்துடன் சேர்த்து, 1 கோடியே, 76 லட்சத்து, 26,310 ரூபாயை பறிமுதல் செய்ததில், ஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில், 1 கோடியே, 67 லட்சத்து, 10,710 ரூபாயை உரியவர்களிடம் ஒப்ப-டைத்தனர்.
