/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிழக்கு தொகுதி எல்லையில் போர்டு பறக்கும் படையினர் தீவிர ரோந்து
/
கிழக்கு தொகுதி எல்லையில் போர்டு பறக்கும் படையினர் தீவிர ரோந்து
கிழக்கு தொகுதி எல்லையில் போர்டு பறக்கும் படையினர் தீவிர ரோந்து
கிழக்கு தொகுதி எல்லையில் போர்டு பறக்கும் படையினர் தீவிர ரோந்து
ADDED : ஜன 09, 2025 07:38 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இத்தொகுதியை ஒட்டி மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, பவானி, பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் பறக்கும் படையினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர், நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தவும், வாகன தணிக்கை செய்யவும், தொகுதி எல்லைகளில் நேற்று தேர்தல் பிரிவு சார்பில் போர்டுகள் வைத்-துள்ளனர். குறிப்பாக, ஈரோடு, கருங்கல்பாளை யம் காவிரி ஆற்-றுப்பாலம், நசியனுார் சாலை செங்கோடம்பாளையம் பிரிவு, சித்-தோடு - பவானி பிரிவு, சோலார் சாலையில் நாடார் மேட்டுக்கு அருகே என, 10க்கும் மேற்பட்ட இடங்களில், 'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எல்லை ஆரம்பம் அல்லது முடிவு' என்ற பிளக்ஸ் போர்டு, பேனர் வைத்துள்ளனர்.
தவிர, அந்த எல்லைக்-கான விபரங்களை பறக்கும் படையினர் உள்ளிட்ட குழுக்களுக்கு வழங்கி, நேற்று சோதனைகளை தீவிரப்படுத்தினர். நேற்றைய நிலையில் தேர்தல் புகார் எண் - 94890 93223 முதற்கட்டமாக வெளியிடப்பட்டும், சி-விஜில் ஆப் மூலம் புகார் பெறப்பட்டும், நடத்தை விதிக்கு மாறான புகார்கள் நேற்று மாலை வரை பதிவா-கவில்லை. மண்டபம், சமுதாய கூடம், ேஹாட்டல்களில் தங்-குவோர் தொடர்பான விதிமுறைகளை, அந்நிர்வாகத்தினரை அழைத்து தேர்தல் பிரிவு சார்பில் வழங்கினர்.

