தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'வெளிமாநில தொழிலாளர் விபரத்தை ஆன்-லைனில் பதிவு செய்யணும்'

'வெளிமாநில தொழிலாளர் விபரத்தை ஆன்-லைனில் பதிவு செய்யணும்'

'வெளிமாநில தொழிலாளர் விபரத்தை ஆன்-லைனில் பதிவு செய்யணும்'


ADDED : நவ 01, 2025 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வெளிமாநில தொழிலாளர் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறுவகை தொழிற்சாலைகள், கடைகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து, மருத்துவமனை, விவசாயம் சார்ந்த தொழில், கோழிப்பண்ணை, செங்கல் சூளை, கட்டுமான பணிகளில் வெளிமாநில தொழிலாளர் ஏராளமானோர் பணிபுரிந்துவருகின்றனர்.

தொழில்முனைவோர், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை, https://labour.tn.gov.in/ism என்ற தளத்தில் பதிவு செய்யவேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us